கனடாவின் தபால்துறையானது முத்திரைகளின் விலையை அதிகரித்துள்ளது.
கட்டண மாற்றங்களால் U.S, சர்வதேச அஞ்சல் மற்றும் உள்நாட்டு பதிவு அஞ்சல் உள்ளிட்டவைகளும் பாதிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு இன்று பொதுமக்களின் கருத்துக்காக அறிவிக்கப்பட்டது. மேலும், ஒழுங்குமுறை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, may மாதம் 6 முதல் நடைமுறைக்குட்படுத்தப்பட உள்ளது.
அத்துடன் கனடா தபால்,கடந்த 10 ஆண்டுகளில் உள்நாட்டு அஞ்சல் கட்டணங்களை இரண்டு முறை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் மற்றும் ஒவ்வொரு ஆண்டும், அதிக முகவரிகளுக்கு வழங்குவதற்கு குறைவான கடிதங்கள் இருப்பதால், “கணிசமான” அளவு நிதி அழுத்தத்தை எதிர்கொள்வதால், இந்த விலை உயர்வு முன்மொழியப்பட்டதாக தபால்துறை கூறுகிறது.