கனடா செய்திகள்

இன்று GTAவில் எரிவாயுவின் விலை 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவை எட்டியுள்ளது

GTA முழுவதும் எரிவாயு விலைகள் திங்கள்கிழமையான இன்று ஆறு மாதங்களில் இல்லாத மிக உயர்ந்த அளவிற்கு உயரும்.

federal carbon விலை, கார்பன் வரி என்றும் குறிப்பிடப்படுகிறது, ஏப்ரல் 1 அன்று ஒரு tonneக்கு $15க்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது, மொத்த விலை tonneக்கு $80 ஆக உள்ளது. பெட்ரோல் மீதான கார்பன் வரி லிட்டருக்கு 3.3 காசுகளும், டீசல் லிட்டருக்கு 4.1 காசுகளும் அதிகரிக்கும்.

இதன் விளைவாக, pumpகளில் பெட்ரோல் விலை 162.9 cents/litre ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என En-Proவின் தலைமை பெட்ரோலிய ஆய்வாளர் Roger McKnight, தெரிவித்தார்.

இது முந்தைய அதிகபட்சமான 160.9 cents/litre இனை மார்ச் 21 அன்று மறைத்துவிடும், மேலும் இது செப்டம்பர் 2023 இல் 173.9 cents/litreராக இருந்த GTA இன் எரிவாயுவின் அதிகபட்ச விலையாக இருக்கலாம்.

Ford அரசாங்கம் மார்ச் 25 அன்று எரிவாயு வரி குறைப்பை ஆண்டு இறுதி வரை நீட்டிப்பதாக அறிவித்தது.

Premier Doug Ford கூறுகையில், மாகாணம் எடுக்கும் வரி லிட்டருக்கு ஒன்பது centsகளாக இருக்கும், இது ஜூலை 2022 இல் வெட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சராசரியாக Ontario குடும்பத்திற்கு $320 சேமிக்கப்படும் என்று அவர் கூறுகிறார்.

அந்த நேரத்தில் Ford எரிவாயு வரியை லிட்டருக்கு 5.7 காசுகள் குறைத்தது, அத்தோடு ஜூன் 30 2024 வரை டீசல் வரி லிட்டருக்கு 5.3 காசுகள் ஆகும்.

சுத்திகரிப்பாளர்கள் குளிர்காலத்தில் இருந்து கோடைகால பெட்ரோலுக்கு மாறுவதால், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விலை 10 காசுகள் வரை உயரும் என்பதால் வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் விரைவில் எதிர்பார்க்கப்படாது.

federal carbon விலையில் அதிகரிப்புடன், கனேடியர்களுக்கு அனுப்பப்படும் காலாண்டு தள்ளுபடிகளானது இப்போது “Canada Carbon Rebate” என்று அழைக்கப்படுகின்றன. மேலும் இவை அதிகரித்தும் வருகின்றன.

Ontarioவில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பமானது ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மற்றும் அடுத்த ஜனவரி மாதங்களில் $280 இனைப் பெற எதிர்பார்க்கலாம்.

Related posts

TD வங்கிப் பணப்பரிவர்த்தனை தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கான செய்தி

Editor

இலங்கையை சேர்ந்த 6 பேர் Berrhaven நகரில் சடலமாக மீட்பு;

Editor

36 ஆண்டுகளின் பின்னர் மிகப்பெரிய NATO பயிற்சி!

Editor