கனடா செய்திகள்

வெளிநாட்டு தலையீடானது பெரிய சவாலாக உள்ளது – பிரான்ஸ் பிரதமர் அறிக்கை

வெளிநாட்டு தலையீடு முயற்சிகள் ஒரு பெரும் சவாலாக உள்ளன. இதை நாடுகள் தங்கள் குடிமக்களிடம் தெரிவிக்க வேண்டும். online மூலமான இணையத் தாக்குதல்கள் மற்றும் தவறான தகவல்கள் போன்றவை வெளிநாட்டு தலையீட்டின் ஒரு பகுதியாகும். இது தொடர்பாக அனைவரையும் எச்சரிக்க வேண்டும் என கடந்த வியாழனன்று Justin Trudeau உடன் நடைபெற்ற சந்திப்பில் பிரான்ஸ் பிரதமர் Gabriel Attal தெரிவித்தார். மேலும் online சேவைகளை மீட்டெடுக்க ஒரு சிறப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, ​​கனடா மற்றும் பிரான்ஸ் இடையே இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான புதிய முயற்சிகளின் தொகுப்பிற்கு Attal மற்றும் Trudeau உடன்பட்டனர்.

இவற்றில் முக்கியமானது கனடாவின் உலகளாவிய கார்பன் விலையிடல் சவாலில் பிரான்ஸ் இணைவதாகும். ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, நியூசிலாந்து, சிலி, நோர்வே, டென்மார்க், சுவீடன், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முன்பு இவ் ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

பிரான்சும் கனடாவும் காட்டுத்தீ மற்றும் சுத்தமான எரிசக்தி ஆகியவற்றிலும் இணைந்து செயற்படவுள்ளன.

Related posts

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட Toronto இனைச் சேர்ந்த பெண்ணிற்கு கனடா முழுவதும் warrant பிறப்பிக்கப்பட்டுள்ளது

admin

பெண்களுக்கான 200m butterfly போட்டியில் கனடா வீராங்கனை McIntosh தங்கம் வென்றார்

admin

2024 இல் Ontario தேர்தலை Ford நிராகரிக்கிறது, ஆனால் 2025 இல் முன்கூட்டியே தேர்தலை நடத்தலாம்

admin