கனடா செய்திகள்

பாதுகாப்பு காரணமாக Israel மற்றும் West Bank செல்லும் பயணங்களிற்கு கனடா அறிவுறுத்தல்

West Bank இல் பதட்டமும் வன்முறையும் அதிகமாக இருக்கும் அதே வேளையில், Israel இனை அண்டிய பகுதி மீது தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் அதிகமாக காணப்படுவதாலும், பாதுகாப்பு நிலைமையின் நிமித்தம் கனேடியர்கள் Israel மற்றும் West Bank இற்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Israel ஆக்கிரமித்துள்ள West Bank இன் கிராமம் ஒன்றில் நுழைந்த சில இஸ்ரேலிய குடியேற்றவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு, வீடுகள் மற்றும் கார்களை தீ வைத்ததில் Palestinian இனை சேர்ந்த ஒருவர் கொள்ளப்பட்டதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

வணிக ரீதியாக உள்ள கனேடியர்கள் அந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் பிராந்திய பாதுகாப்பு நிலைமை மிகவும் கொந்தளிப்பாக உள்ளதாகவும் அது முன்னறிவிப்பின்றி அதிகரிக்கலாம் எனவும் வெளியுறவு அமைச்சர் Mélanie Joly குறிப்பிட்டார்.

இரண்டு வாரங்களிற்குள் World Central Kitchen இல் இருந்த ஏழு உதவி பணியாளர்களில் ஒரு கனடிய-அமெரிக்க குடிமகன் உட்பட கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அங்கு உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலினால் கொல்லப்பட்டனர்.

Related posts

Trudeau பொதுச் சபையில் கலந்து கொள்கிறார்- அங்கு Biden இறுதி ஐ.நா உரையை ஆற்றுகிறார்

admin

சீனாவில் நான்கு கனேடியர்கள் தூக்கிலிடப்பட்டனர்

canadanews

முன்னாள் Liberal அமைச்சரவை அமைச்சரும் எம்.பி.யுமான Jim Peterson அவரது 82 வயதில் காலமானார்

admin