கனடா செய்திகள்

இன்று சில கனேடிய குடும்பங்கள் ஒரு குழந்தைக்கு $620 வரை பெற்றுக்கொள்வார்கள்

சமீபத்திய Canada Child Benefit (CCB) இனால் இந்த வெள்ளிக்கிழமை கனேடிய குடும்பங்களிற்கு நிதி வழங்கப்படவுள்ளது. மத்திய அரசின் இத் திட்டமானது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு குழந்தை வளர்ப்பு செலவிற்கு உதவியாக இருக்கும்.

2016 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இத் திட்டத்திற்கு கனேடிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் அகதிகளில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான முதன்மை பராமரிப்பாளர்கள் தகுதியுடையவர்கள். இந்த் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குழந்தையின் பிறப்புப் பதிவு மூலம் சமர்ப்பிக்கலாம், online படிவத்தை பூர்த்தி செய்யலாம் அல்லது வரி மையத்திற்கு அஞ்சல் அனுப்பலாம். இதற்கான அடுத்த கட்டணம் செலுத்தும் திகதி மே 17 ஆகும்.

இக் கொடுப்பனவுகள் குடும்பத்திற்கான வருமானம் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையை பொறுத்து தீர்மானிக்கப்படும். $34,863 இற்கு கீழ் நிகர வருமானம் கொண்ட குடும்பங்கள் ஒரு குழந்தைக்கு அதிகபட்ச தொகையைப் பெறமுடியும். மேலும் ஒரு விண்ணப்பதாரர் ஆறு வயதுக்குட்பட்ட ஒரு குழந்தைக்கு ஆண்டுதோறும் $7,437 வரையும், ஆறு முதல் 17 வயது வரையிலான ஒரு குழந்தைக்கு $6,275 வரையும் பெறலாம். இது இளைய குழுவிற்கு மாதத்திற்கு $619.75 ஆகவும், பழைய குழுவிற்கு $522.91 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.

Related posts

Postal union உடனான பிரச்சினைகள் Canada Post நிலையத்திற்கு 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

admin

கனடாவின் பணவீக்க விகிதம் 2% இலக்கை எட்டியுள்ளது, இது மூன்று ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும்

admin

Trudeau இற்கு எதிராக வன்முறை மிரட்டல் விடுத்த நபர் RCMP இனால் கைது

admin