கனடா செய்திகள்

வெளிநாட்டு விவகார அமைச்சர் Mélanie Joly மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல் பகுதிக்கு பயணம் செய்யவுள்ளார்.

கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அங்கு அவர் அமைதி காத்தல் மற்றும் உதவிகளில் கவனம் செலுத்துவார்.

Mélanie Joly இன்று புறப்பட உள்ளதாகவும், Cyprus, Lebanon, Turkey மற்றும் Greece ஆகிய நாடுகளுக்குச் செல்வதாகவும், அங்கு அவர் தனது சகாக்கள் மற்றும் பிற அரசாங்க அதிகாரிகளைச் சந்திப்பார் என்றும் Global Affairs Canada தெரிவிக்கின்றது.

இப் பயணத்தின் மூலம் Cyprus இல் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையின் 60வது ஆண்டு நிறைவைக் குறிப்பது மற்றும் Gaza இல் மனிதாபிமான உதவிகளை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது பற்றியும், மத்திய கிழக்கு மற்றும் தெற்கு Caucasus இல் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்தும் அவர் விவாதிப்பார்.

Related posts

Toronto பயங்கரவாத சந்தேக நபர் 2018 இல் கனடாவுக்கு வந்தார்

admin

குழந்தைகளுக்கான RSV க்கு எதிரான உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தை NACI பரிந்துரைப்பு

admin

Air Canada விமானிகள் அடுத்த மாத தொடக்கத்தில் நிறுத்தத்தில் ஈடுபடலாம்

admin