கனடா செய்திகள்

Navalny இன் சிறைவாசம் மற்றும் மரணத்தில் பங்கு வகித்த மேலும் 13 ரஷ்யர்களிற்கு கனடா தடை விதிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny இன் தடுப்புக்காவல் மற்றும் இறுதியில் மரணத்திற்கு பங்களித்த அதிகாரிகளை குறிவைத்து கனடா மேலும் 13 ரஷ்ய பிரஜைகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

கணவரின் மரணத்திற்குப் பிறகு ஊழல் எதிர்ப்புப் பணிகளை அவரது மனைவியான Yulia Navalnaya மேற்கொண்டார். இவர் செவ்வாயன்று Ottawa இல் Joly மற்றும் பிரதமர் Justin Trudeau இனை நேரில் சந்திக்க இருந்த நிலையில் அவரது விமானத்தில் ஏற்ப்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக வருகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

February 16 அன்று ரஷ்ய தண்டனைக் காலனியில் Navalny இறந்தார். அங்கு அவர் ஜனாதிபதி Vladimir Putin இற்கு சிக்கலைக் கொடுக்கும் எதிர்க்கட்சி பிரமுகரை மௌனமாக்குவதற்காக உருவாக்கப்பட்டதாக கனடா நம்பும் குற்றச்சாட்டுகளுக்காக 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். அவரது உடல் February 24 அன்று அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் March 1 அன்று Moscow இல் அடக்கம் செய்யப்பட்டார். அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்த முயன்ற நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.

நவல்னியின் மரணத்தில் எந்த தொடர்பும் இல்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது, அவர் சிறையில் walking சென்றபோது சரிந்து விழுந்ததாகவும், அவரை மீட்க முடியவில்லை என்றும் கூறியுள்ளது.

தடை செய்யப்பட்டோர் பட்டியலில் ரஷ்ய பாதுகாப்பு முகவரான Aleksei Anatolyevich Aleksandrov அடங்குவார். இவர் 2023 இல் விசமூட்டலில் ஈடுபட்ட முக்கிய முகவர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டதாக அமெரிக்கா கூறியது. இறுதியில் அவர் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட்டு ஜெர்மனியில் நரம்பு முகவர் விஷத்திற்கு சிகிச்சை பெற்றார். 2021 இல் ரஷ்யாவுக்குத் திரும்பிய நவல்னி கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்த ரஷ்யாவின் சிறைச்சாலை அமைப்பின் தலைவரான Sergey Anatolyevich Moroz உம் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் உள்ளார்.

Related posts

கனேடியர்களில் 9 பேரில் ஒருவருக்கு COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Editor

அவசர கார்பன் விலைக் கூட்டத்தை நடத்த கோரிக்கை

admin

இஸ்ரேலும் கமாசும் நிலையான போர் நிறுத்தத்தை நோக்கி செயல்பட வேண்டும் என கனடிய பிரதமர் “Justin Trudeau” வலியுறுத்தினார்.

Editor