வியாழன் அன்று Washington, D.C யில் NATO இன் மூன்று நாள் வருடாந்திர தலைவர்களின் உச்சிமாநாடு முடிவடைந்த நிலையில், பிற நாடுகளின் அழுத்தத்திற்குப் பிறகு புதிதாக அறிவிக்கப்பட்ட காலவரிசை வந்தது.
NATO இன் பாதுகாப்பு வரவு செலவுத் திட்ட இலக்குகளை 2032 ஆம் ஆண்டிற்குள் கனடா முழுமையாக எதிர்பார்க்கிறது என்று பிரதமர் Justin Trudeau கூறினார். மேலும் கூட்டணியின் 32 உறுப்பினர்கள் தங்கள் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 2% பாதுகாப்புக்காக செலவிடுவதாக உறுதியளித்துள்ளனர்.
2014ல் இருந்து கனடா தனது பாதுகாப்புச் செலவீனத்தை 57 சதவீதம் அதிகரித்தாலும், அது இன்னும் மற்ற நேட்டோ நட்பு நாடுகளை விட பின்தங்கியுள்ளது. தற்போதைய செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.37 சதவீதமாக உள்ளது. ஏப்ரலில் இருந்து புதிய பாதுகாப்புக் கொள்கை 2030ல் 1.76 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் federal budget ஆனது 2028 ஆம் ஆண்டு வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியை மட்டுமே திட்டமிடுகிறது. ஆனால் 2032 ஆம் ஆண்டிற்கான கண்ணோட்டத்தின் மதிப்பீட்டை அரசாங்கம் வழங்கவில்லை.
இந்த ஆண்டுக்கான கனடாவின் defence budget $29.9 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு 32 NATO நட்பு நாடுகளில் 23 இந்த ஆண்டு இரண்டு சதவீத இலக்கை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.