கனடா செய்திகள்

March மாதத்திற்கான Montreal இன் வீட்டு விற்பனை அதிகரித்துள்ளது

MONTREAL – கடந்த ஆண்டு March மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு March இற்கான வீட்டு விற்பனையானது 14.2 சதவீதம் உயர்ந்துள்ளது. 2023 March மாதம் 3930 ஆக இருந்த மொத்த விற்பனையானது இவ் ஆண்டு 4488 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் இந்த ஆண்டிற்கான விற்பனையானது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட சராசரி அளவின் கீழ் உள்ளதாக Quebec Professional Association இனுடைய தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து வகையான வீடுகளிற்குமான சராசரி விலை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் $565,000 ஆக இருந்த தனி குடும்பம் ஒன்றிற்கான வீட்டின் விலை 5.6 சதவீதம் உயர்ந்துள்ளது. plex ஒன்றிற்கான சராசரி விலை 5.5 சதவீதம் உயர்ந்து $750,000 ஆகவும், condominium ஒன்றிற்கான சராசரி விலை 4.9 சதவீதம் உயர்ந்து $400,000 ஆகியுள்ளது.

March மாதத்திற்கான பட்டியலின் படி கடந்த ஆண்டை விட 17.1 சதவீதம் அதிகரித்து 18,707 ஆகவும், புதிய பட்டியலின் படி 10.4 சதவீதம் அதிகரித்து 6,973 ஆகியுள்ளது.

Related posts

இலங்கையை சேர்ந்த 6 பேர் Berrhaven நகரில் சடலமாக மீட்பு;

Editor

Cantaloupe salmonella பாதிப்பில் கனடாவில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்தது.

Editor

Ontario இல் குற்றம் சாட்டப்பட்ட வாகனத் திருடர்களின் ஓட்டுநர் உரிமத்திற்கு வாழ்நாள் தடை விதிக்கும் சாத்தியம்

admin