கனடா செய்திகள்

Gaza எல்லை அருகே கத்தியை கொண்டு மிரட்டியதால் கனேடியர் ஒருவர் கொலை : Israeli பொலீசார்

Gaza எல்லைக்கு அருகே உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளை கத்தியை காட்டி மிரட்டியதில் கனேடிய பிரஜை ஒருவர் திங்கள்கிழமை கொல்லப்பட்டதாக இஸ்ரேல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Gaza எல்லையில் இருந்து வடக்கே 300 மீட்டர் தொலைவில் உள்ள Netiv HaAsara நகரின் நுழைவாயிலுக்கு அருகில் வாகனத்தை விட்டுவிட்டு கத்தியுடன் உள்ளூர் பாதுகாப்புப் படையினரை அணுகினார். இதைத் தொடர்ந் து அவை மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொல்லப்பட்டடாக இராணுவம் கூறுகின்றது.

கனேடிய நபர் ஒருவர் இஸ்ரேலில் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவம் அவரது குடியுரிமையை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் அவர் Gaza பகுதியிலிருந்து அல்லாமல் இஸ்ரேலிய எல்லைக்குள் வந்த ஒரு வெளிநாட்டு பிரஜை என்று கூறியப்படுகின்றது. சிலர் அவர் ஒரு அமெரிக்க குடிமகன் என்று கூறுகின்றனர். இருப்பினும் இஸ்ரேலில் உள்ள கனடாவின் தூதரக அதிகாரிகள் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

இஸ்ரேலின் போரில் இதுவரை 39,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், அங்கு வசிக்கும் 2.2 மில்லியன் பாலஸ்தீனியர்களுக்கு எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.

Related posts

Quebec வரலாற்று மழையில் இருந்து மீண்டு வருகிறது

admin

Bank of Canada இன் வட்டி விகிதங்களினை குறைக்க மீண்டும் வலியுறுத்தல் – Doug Ford

admin

Oshawa உணவகத்தின் முன்னாள் manager மீது ஊழியர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு

admin