Global Affairs Canada இன் ஒரு செய்தி வெளியீட்டில், ஆறு இந்திய தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு கனேடிய குடிமக்களுக்கு எதிரான இலக்கு பிரச்சாரம் தொடர்பாக வெளியேற்ற அறிவிப்பு அனுப்பப்பட்டதாகக் கூறியது. இதற்குப் பதிலடியாக, ஆறு கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுத்து, அவர்களை அக்டோபர் 19ஆம் திகதிக்குள் வெளியேறுமாறு கூறியுள்ளது.
ஏறக்குறைய எட்டு பேர் கொலைகள் தொடர்பாக கைது செய்யப்பட்டதாகவும், 22 பேர் மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலருக்கு இந்திய அரசாங்கத்துடன் தொடர்பு உள்ளது என்றும் Gauvin கூறினார்.
கனடாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல்வேறு வகையான நிறுவனங்கள் தகவல்களைச் சேகரிக்க இந்திய அரசாங்கத்தின் முகவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் சான்றுகள் காட்டுகின்றன. அத்தோடு இந்த தனிநபர்கள் மற்றும் வணிகங்களில் சிலர் இந்திய அரசாங்கத்திற்காக வேலை செய்யும்படி வற்புறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர். இந்திய அரசாங்கத்திற்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள் தெற்காசிய சமூகத்தின் உறுப்பினர்களைக் குறிவைக்கப் பயன்படுத்தப்படுகின்றன எனவும் Duheme தெரிவித்தார்.
இந்திய அரசின் வெளிநாட்டு தலையீடு சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க பொதுமக்கள் உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைனிலோ அல்லது நேரிலோ அச்சுறுத்தப்பட்டதாக உணரும் எவரும், அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர்களது உள்ளூர் போலீஸில் புகாரளிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.