கனடா செய்திகள்

பணவீக்கம் காரணமாக BoC இந்த வாரம் அதிகப்படியான விகிதக் குறைப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த வாரம் Bank of Canada வட்டி விகிதக் குறைப்புகளை விரைவுபடுத்துவதுடன் அதன் கொள்கை விகிதத்தை அரை சதவிகிதம் குறைக்கும் என்று முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர். கனடாவின் 2% பணவீக்க இலக்கை விட, செப்டம்பரில் 1.6% வருடாந்த பணவீக்க விகிதத்தை Statistics Canada அறிவித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. Bank of Canada அதன் முக்கிய வட்டி விகிதத்தை இதுவரை மூன்று முறை குறைத்து, தற்போது 4.25 சதவீதமாகக் குறைத்துள்ளது.

வீழ்ச்சியடைந்த பொருளாதார பின்னணி மற்றும் பணவீக்கம் காரணமாக Bank of Canada October மற்றும் Decemberஇல் பெரியளவில் வட்டி விகிதக் குறைப்புகளை வழங்கி, அதன் கொள்கை விகிதத்தை 3.25 சதவீதமாகக் குறைக்கும் என பல முன்னறிவிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர். 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அதன் கொள்கை விகிதம் 2.75 சதவீதத்தை எட்டும் வரை மத்திய வங்கி தொடர்ந்து விகிதங்களைக் குறைக்கும் என்று பாராளுமன்ற budget அதிகாரி கணித்தார்.

கனடாவில் உண்மையான வட்டி விகிதங்கள் மற்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது, இது கனடியப் பொருளாதாரத்தில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

Related posts

இன்று சில கனேடிய குடும்பங்கள் ஒரு குழந்தைக்கு $620 வரை பெற்றுக்கொள்வார்கள்

admin

CSIS இயக்குனரான David Vigneault 7 வருடங்களிற்கு பின் பணியில் இருந்து விலகுகின்றார்

admin

Trudeau இற்கு எதிராக வன்முறை மிரட்டல் விடுத்த நபர் RCMP இனால் கைது

admin