இந்திய தூதரக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை Brampton இல் உள்ள ஒரு இந்து கோயிலுக்குச் சென்றபோது ஏற்ப்பட்ட வன்முறை மற்றும் குழப்பமான நிலையினைத் தொடர்ந்து மூன்று கைதுகள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் காலிஸ்தான் எனப்படும் தனி சீக்கிய நாட்டிற்கு ஆதரவாக பதாகைகளை வைத்திருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றவர்களுடன் மோதுவதைக் காட்டுகின்றன. மேலும் Hindu Sabha Mandir கோவிலைச் சுற்றியுள்ள மைதானத்தில் முஷ்டி சண்டைகள் மற்றும் மக்கள் ஒருவரையொருவர் கம்புகளால் தாக்குவதை வீடியோக்கள் காட்டுகின்றன.
மூத்தவர்களுக்கு ஓய்வூதிய உதவி உள்ளிட்ட நிர்வாக சேவைகளை வழங்குவதற்காக இந்திய துணை தூதரக அதிகாரிகளின் வருகைக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக நீதிக்கான சீக்கியர்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள், அமைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தொடர்ந்து இருக்கும் வகையில் கோயில்களுக்கு மேலும் விஜயம் செய்வதற்கான திட்டங்களை இந்திய உயர் ஆணையம் அறிவித்துள்ளது.
வன்முறை மோதல்கள் தொடர்பாக Peel Regional Police (PRP) Mississauga இனைச் சேர்ந்த Dilpreet Singh Bouns (வயது 43) என்பவரை இடையூறு விளைவித்ததாகவும், காவல்துறை அதிகாரியைத் தாக்கியதாகவும், Brampton இனைச் சேர்ந்த Vikas (வயது 23) ஆயுதத்தால் தாக்கியதற்காகவும், மற்றும் Mississauga இனைச் சேர்ந்த Amritpal Singh (வயது 31) $5,000-க்கும் அதிகமான முறைகேடு செய்ததற்காகவும் கைது செய்துள்ளனர்.
இவ் மூவரும் பிற்காலத்தில் Brampton இல் உள்ள Ontario நீதிமன்றத்தில் ஆஜராவார்கள். அத்தோடு கோவிலுக்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் கடமை தவறிய ஒரு போலீஸ் அதிகாரியும் இருந்ததாகவும், அவர் சம்பளத்துடன் இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.