கனடா செய்திகள்

அக்டோபரில் கனடாவின் வேலையின்மை விகிதம் 6.5% ஆக நிலையானதாக உள்ளது, நாட்டின் பொருளாதாரம் 15,000 வேலைகளைச் சேர்க்கின்றது

அக்டோபரில் நிறுவனங்கள் 15,000 வேலைகளை உருவாக்கினாலும், கனேடிய தொழிலாளர் சந்தை மற்றொரு மந்தமான பணியமர்த்தல் மாதத்தை அறிவித்தது. இருப்பினும், Bank of Canada கவலைப்படும் அளவுக்கு புள்ளிவிவரங்கள் பயங்கரமானவை அல்ல என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் வேலையின்மை விகிதம் 6.5 சதவீதமாக நிலையாக இருப்பதாக Statistics Canada இன் labour force survey வெள்ளிக்கிழமை கூறியது.

வணிகம், கட்டிடம் மற்றும் ஆதரவு சேவைகள் வேலைவாய்ப்பில் மிகப்பெரிய லாபத்தைக் கண்ட அதேவேளை நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வாடகை மற்றும் குத்தகை ஆகியவை மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன. TD இன் பொருளாதார இயக்குனரான James Orlando, மத்திய அரசின் குடியேற்றப் பின்னடைவு வேலைச் சந்தையை நிலைப்படுத்த உதவும் என்று கூறினார்.

பணவீக்கம் வீழ்ச்சி மற்றும் பலவீனமான பொருளாதார வளர்ச்சியின் பிரதிபலிப்பாக மத்திய வங்கி கடந்த மாதம் அதன் கொள்கை விகிதத்தை அரை சதவீதம் குறைத்தது. அதன் முக்கிய வட்டி விகிதம் இப்போது 3.75 சதவீதமாக உள்ளது, இது ஜூன் மாதத்தில் ஐந்து சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. மத்திய வங்கியின் அடுத்த வட்டி விகித அறிவிப்பு டிசம்பர் 11 அன்று இருக்கும்.

தொழிலாளர் சந்தையில் வலுவான ஊதிய வளர்ச்சி கனடாவில் தீவிரமடைந்துள்ளது. அக்டோபரில் சராசரி மணிநேர ஊதியம் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 4.9 சதவீதம் அதிகரித்து $35.76ஐ எட்டியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பணவீக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது, அக்டோபர் 2022ல் 6.9 சதவீதமாக இருந்த பணவீக்கம் செப்டம்பரில் 1.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. மறுபுறம், ஊதிய வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது.

Related posts

நவம்பர் 3ம் திகதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், கனடா தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வாக்களிக்கின்றனர்

admin

Durham இல் இடைத்தேர்தல் – பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்!

Editor

நாளொன்றுக்கு $10 குழந்தை பராமரிப்பு திட்டத்திற்கான operators இன் எதிர்ப்பு காரணமாக பல GTA தினப்பராமரிப்புகள் செவ்வாய்கிழமை மூடப்படலாம்

admin