கனேடிய உணவு ஆய்வு நிறுவனம் பல மாகாணங்களில் ஒரு அமெரிக்க நிறுவனம் அனுப்பிய மற்றும் விற்கப்பட்ட முழு வெள்ளரிகளையும் திரும்பப் பெறுவது குறித்து நுகர்வோரை எச்சரிக்கிறது.
அரிசோனாவை தளமாகக் கொண்ட SunFed Produce ஆனது salmonella மாசுபாட்டின் காரணமாக அக்டோபர் 12 மற்றும் நவம்பர் 26 க்கு இடையில் விற்கப்பட்ட அனைத்து வெள்ளரிகளையும் திரும்பப் பெறுகிறது. Ontario, Alberta, B.C மற்றும் Saskatchewan முழுவதும் உள்ள சில்லறை இடங்களில் வெள்ளரிகள் விநியோகிக்கப்பட்டு விற்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ் வெள்ளரிகள் “SunFed” லேபிளுடன் கூடிய மொத்த அட்டை கொள்கலன்களில் அல்லது வெள்ளை பெட்டிகள் அல்லது கருப்பு பிளாஸ்டிக் பெட்டிகளில் “Agrotato, S.A. de C.V.” என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். மேலும் இவை அக்டோபர் 12 – நவம்பர் 15, 2024 க்கு இடையில் விற்க்கப்பட்டவை எனவும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் SunFed க்கு அறிவித்ததைத் தொடர்ந்து SunFed இந்த திரும்பப்பெறுதலைத் தொடங்கியுள்ளது. SunFed நிறுவனத்தால் விற்கப்படும் பிற தயாரிப்புகள் இந்த திரும்பப் பெறுதலிற்கு உட்படுத்தப்படவில்லை.
salmonella இளம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று வலி போன்ற நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். திரும்ப அழைக்கப்பட்ட தயாரிப்புகளை உட்கொள்ளவோ, பரிமாறவோ, பயன்படுத்தவோ, விற்கவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. மாறாக அவர்கள் வாங்கிய இடத்திற்குத் திரும்பி அனுப்பலாம் அல்லது வெறுமனே தூக்கி எறியலாம்.