கனடா செய்திகள்

உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதில் கனடா ஒரு பங்கை வகிக்க வேண்டும்!

ரஷ்யா- உக்ரைன் போர் முடிவுக்கு வந்த பின்னர் உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதில் கனடா ஒரு பங்கை வகிக்க வேண்டும் என்று விரும்புவதாக கனேடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly செவ்வாயன்று கூறினார்.

உக்ரைன் தனது பிரதேசத்தை இழக்கும் என்றும் NATO இராணுவ கூட்டணியில் சேர முடியாது என்றும் Washington கூறியதை அடுத்து அந்தப் பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் அதிகாரிகளைச் சேர்க்குமாறு கனடா அமெரிக்காவிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதாகவும் Joly கூறினார்.

அத்துடன் Moscow இன் நிபந்தனைகளின் அடிப்படையில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது ஐரோப்பாவை மேலும் சீர்குலைக்க ரஷ்யாவை ஊக்குவிக்கும் என்றும் கூறிய அவர் சரியான காரணங்களுக்காக போராடும் உக்ரைனின் விடயங்களால் பல கனேடியர்கள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாகவும் வேகமாகவும் நடைபெற்று வருவதாக கூறிய வெளியுறவு அமைச்சர் இரு தரப்பும் ஏற்கெனவே NATO அங்கத்துவ நாடுகளாக இருப்பதால் பரஸ்பரம் பாதுகாப்பு உட்பட்ட கூடுதல் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

Related posts

பெரும்பாலான Liberal பாராளுமன்ற உறுப்பினர்கள் Trudeau ஐ தலைவராக ஆதரிக்கின்றனர்: – Freeland

Canadatamilnews

தென்னாப்பிரிக்காவின் ICJ வழக்கை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பிரதமர் Trudeau !

Editor

Ontario பாடசாலைகள், குழந்தை பராமரிப்பு நிலையங்களை கட்டுவதற்கு $1.3 பில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது

admin