Russia வின் படையெடுப்பினால் நாட்டைவிட்டு வெளியேறி கனடாவில் உள்ள Ukrain நாட்டவர்கள் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட தற்காலிக விசாக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட வேலை மற்றும் கல்வி கற்க விண்ணப்பிப்பதற்கான புதிய கால எல்லை March 31, 2026 ஆகும்.
உக்ரேனியர்களும் அவர்களது குடும்பத்தினரும் நாடு வழமைக்கு திரும்பும்போது நாட்டிற்கு திரும்ப உதவும் வகையில் Ottawa ஒரு மில்லியன் உக்ரேனியர்களுக்கான விண்ணப்பங்களை அங்கீகரித்தது, ஆனால் சுமார் மூன்று லட்சம் விண்ணப்பதாரர்கள் மட்டுமே கனடாவுக்கு வருகைதந்திருந்தனர்.
கடந்த மாதம் கனடாவின் குடிவரவு அமைச்சர் Marc Miller மற்றும் Ukrainian Canadian Congress நிர்வாக இயக்குனரான Ihor Michalchyshyn ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது Michalchyshyn இத்திட்டத்தின் கீழ் மூன்று வருடங்களுக்கு நீடிப்பை கோரியிருந்ததன் அடிப்படையிலேயே கனடாவால் ஒருவருட கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலமான இலவச தீர்வு சேவைகளுக்கான செயற்பாடுகள் அனைத்தும் March 31, 2025 உடன் காலாவதியாகிறது என்பதுடன் இத்திட்டம் Russia வின் படையெடுப்பினால் பாதிக்கப்பட்ட உக்ரேனியர்களுக்கு எந்தளவுக்கு உதவுகிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாக Immigration, Refugees and Citizenship Canada அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.