கனடா செய்திகள்

கனடாவில் 20 சதங்களால் குறையும் எரிபொருள் விலை

April 01 ஆந் திகதி முதல் நுகர்வோர் காபன் வரி இரத்துச் செய்யப்படும் என்ற பிரதமர் Carney இன் கொள்கைக்கு அமைவாக Greater Toronto பகுதி உட்பட நாடு முழுவதும் ஒரேநாளில் எரிவாயு விலை குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்துறை ஆய்வாளர் Dan McTeague இன் கணிப்பின்படி ஒரே நாளில் எரிவாயு விலைகள் 20 சதம் குறையும் என்று மதிப்பிட்டுள்ளார். பெட்ரோலுக்கான தற்போதைய காபன் வரி லீற்றருக்கு 17.61 சதமாகவுள்ளதாகவும், Ontario வில் April 01 ஆந் திகதி தொடக்கம் நிரப்பு நிலையங்களில் லீற்றருக்கு குறைந்தது 19.9 சதமாக குறையும் என்றும் McTeague கூறுகிறார்.

இவற்றில் gasoline மட்டுமல்லாது diesel மற்றும் விமான எரிபொருள், இயற்கை எரிவாயு போன்றவையும் உள்ளடங்குகிறது. காபன் வரியை தொடர்ச்சியாக எதிர்த்து வரும் Ontario முதல்வர் Doug Ford இது தொடர்பில் கருத்து வெளியிட்டபோது இதுவரை இல்லாத மோசமான வரி என காபன் வரியைப் பற்றிக் கூறினார்.

Related posts

டொராண்டோவிற்கான சிறப்பு வானிலை அறிக்கை

canadanews

தென்னாப்பிரிக்காவின் ICJ வழக்கை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பிரதமர் Trudeau !

Editor

விசாரணையில் இந்தியாவின் ஒத்துழைப்பை இங்கிலாந்து கோருகிறது

admin