கனடா செய்திகள்

கனடா மத்திய வங்கியின் இந்த வார வட்டி விகித எதிர்பார்ப்பு

கனடாவில் பொருளாதார வீழ்ச்சியானது எதிர்வரும் மாதங்களில் வட்டி விகிதக் குறைப்புகளுக்கு களம் அமைக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுவதால், இந்த வாரம் கனடா வங்கி அதன் வட்டி விகித அறிவிப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனேடியப் பொருளாதாரத்தின் மந்தநிலையானது மத்திய வங்கி எதிர்பார்த்ததற்கும் – எதிர்பார்ப்பதற்கும் பரந்த அளவில் உடன்படுகின்றதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் இந்த வருடம் ஜனவரியில் 2.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலையில் பணவீக்கமானது சீராக குறைந்து கொண்டே இருக்க வேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கனடா மத்திய வங்கி, குறைந்தபட்சம் பணவீக்கக் குறிகாட்டிகளை பயன்படுத்தி அடிப்படை பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்பார்த்துள்ளது .

Related posts

வெளிநாட்டு தலையீடானது பெரிய சவாலாக உள்ளது – பிரான்ஸ் பிரதமர் அறிக்கை

admin

NATO அமைப்பில் 7 வது பெரிய பங்காளராக – கனடா

Editor

Durham இல் இடைத்தேர்தல் – பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்!

Editor