February முதல் ஒவ்வொரு வாரமும் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட கனேடிய வாகனங்கள் கண்டெடுக்கப்பட்டதாக Interpol தெரிவிக்கின்றது.
திருடப்பட்ட வாகனங்களுக்கான தரவுத்தளத்தை Interpol உடன் ஒருங்கிணைக்க இந்த ஆண்டின் தொடக்கத்தில் RCMP எடுத்த முடிவின் காரணமாக மொத்தம் 1,500 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
137 நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலின் படி வாகன திருட்டிற்காக உலகின் முதல் 10 நாடுகளில் கனடா இடம்பிடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ் திருடப்பட்ட வாகனங்கள் போதைப்பொருள் கடத்தலுக்கு மட்டுமின்றி வேறு சில குற்றங்களிற்கும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.