கனடா செய்திகள்

Toronto இன் Port Lands இல் ஏற்ப்பட்ட தீ விபத்தில் காயங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மதியம் 1 மணியளவில் Cherry கடற்கரைக்கு அருகில் புகைமூட்டமான தீ விபத்து ஏற்பட்டதையடுத்து Toronto Fire Services (TFS) அவ் இடத்திற்கு விரைந்தன. இவ் விபத்து 8 Unwin Ave இன் International Marine Passenger Terminal வெளியே ஏற்ப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது Cherry தெருவுக்கு அருகிலுள்ள Netflix தயாரிப்பு மையத்தை ஒட்டிய வேலிக் கோட்டில் Toronto Port இன் சொத்துக்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று Acting District தலைவர் Craig Jeffries தெரிவித்துள்ளார்.

இவ் தீ விபத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அத்தோடு அப்பகுதியில் உள்ள சாலைகள் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதுடன் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் தொடர்ந்தும் உள்ளனர்.

Related posts

Navalny இன் சிறைவாசம் மற்றும் மரணத்தில் பங்கு வகித்த மேலும் 13 ரஷ்யர்களிற்கு கனடா தடை விதிப்பு

admin

நான்காவது சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்

admin

Toronto வில் குடும்ப மருத்துவர்களுக்கு பற்றாக்குறை;

Editor