D-Day இன் 80 ஆவது ஆண்டு நிறைவையொட்டி பிரதம மந்திரி Justin Trudeau அடுத்த மாதம் France இற்கு பயணம் செய்யவுள்ளார்.
நேச நாட்டுப் படை நடவடிக்கையின் போது 14,000 கனேடியர்கள் கடற்கரையைத் தாக்கியதில் இருந்து 80 ஆண்டுகளைக் குறிக்கும் June 6 அன்று Juno கடற்கரையில் கனேடிய விழா உட்பட பிரான்சில் D-Day நிகழ்வுகளில் Trudeau கலந்துகொள்வார். மேலும் Omaha கடற்கரையில் அதே நாளில் ஒரு சர்வதேச விழா நடைபெறும்.
June 5 அன்று 2049 கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்ட Bény-sur-Mer கனேடிய போர் கல்லறையில் நினைவுச்சின்னம் நடைபெறும்.
D-Day ஆனது இரண்டாம் உலகப் போரின் முடிவின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
International Criminal Court இனால் போர் குற்றங்களிற்காக arrest warrant விதிக்கப்பட்டுள்ள ரஷ்ய அதிபர் Vladimir Putin இற்கு இவ் நிகழ்விற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை.