கனடா செய்திகள்

ஆபத்தான QEW பறக்கும் சக்கர விபத்தில் நியூயார்க் மாநில குடியிருப்பாளர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்

கடந்த வாரம் New York மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் St. Catharines இல் உள்ள QEW இன் coach பேருந்தின் மீது பறக்கும் சக்கரம் மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் மூவர் காயமடைந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதன் போது van ஒன்றின் சக்கரம் ஒன்று கழன்று, எதிர் பாதையில் இருந்த pickup truck மீது மோதியதால், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்ததாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் Toronto இனைச் சேர்ந்த 48 வயதான பஸ் பயணி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பயணிகளும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

New York மாநிலத்தில் வசிக்கும் 45 வயதான minivan ஓட்டுநர் ஒருவர் இக் குற்றச்சாட்டுக்களிற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related posts

Ontario பாடசாலைகள், குழந்தை பராமரிப்பு நிலையங்களை கட்டுவதற்கு $1.3 பில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது

admin

செங்கடலில் போக்குவரத்து கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு கனடா மற்றும் நட்பு நாடுகள் “Houthi” கிளர்ச்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

Editor

ServiceOntario ஊழியர் சம்பந்தப்பட்ட வாகனத் திருட்டு விசாரணையில் 100க்கும் மேற்பட்ட திருடப்பட்ட வாகனங்கள் மீட்டெடுப்பு: Toronto police

admin