கனடா செய்திகள்

Trudeau எந்த விதத்திலும் Rafah இல் இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதலை ஆதரிக்கவில்லை

Rafah இல் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை கனடா எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை எனவும் Rafah இல் பொதுமக்களைக் கொன்ற இஸ்ரேலிய தாக்குதல்களால் தனது அரசாங்கம் திகிலடைந்துள்ளது எனவும் பிரதம மந்திரி Justin Trudeau தெரிவித்தார். ஆனால் அவர் அதைப் பற்றி எடுக்கவுள்ள நடவடிக்கை பற்றி கேட்ட போது செய்தியாளர்களிடமிருந்து விலகிச் சென்றார்.

கடந்த October 7 ஆம் தேதி கொடூரமான Hamas தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை கனடா ஆதரித்தது, ஆனால் தெற்கு நகரத்தில் தாக்குதலைத் தொடர வேண்டாம் என்று கனடா இஸ்ரேலை வலியுறுத்தியதாக ட்ரூடோ கூறுகிறார்.

Rafah ஆனது Hamas இன் கோட்டையாக மாறிவிட்டதாகவும், கடந்த அக்டோபரில் இஸ்ரேலில் 1,200 பேரைக் கொன்ற தீவிரவாதக் குழுவை விரட்டியடிப்பதில் இது முக்கியமானது என்றும் இஸ்ரேல் கூறுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை படுகொலையானது தவறான செயல் என்றும் தெரிவித்தது.

இதுவரை போரில் போராளிகள் உட்பட 36,000 பேர் கொல்லப்பட்டதாக Hamas-run Health Ministry தெரிவித்துள்ளது.

Related posts

கிட்டத்தட்ட பாதி மாணவர்கள் உணவு மற்றும் தங்குமிடம் போன்ற தேவைகளுக்கு பணம் செலுத்த போராடுகிறார்கள்

admin

Alta இன் Fort McMurray பகுதிகளில் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

admin

இந்த ஆண்டு திருடப்பட்ட 2,000 வாகனங்கள் Border agency இனால் மீட்பு

admin