கனடா செய்திகள்

Liberals இனால் கனேடிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எடுக்கப்பட்ட தேர்வை நீக்க Conservatives உறுதிமொழி

கனேடிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தலைமை தாங்குவதற்காக Liberals இனால் நியமிக்கப்பட்ட, முதல் முஸ்லீம் மற்றும் இனவெறி கொண்ட நபரான Birju Dattani அடுத்த மாதம் ஐந்தாண்டு காலத்திற்கு தலைமை ஆணையராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில் எதிர்கால Pierre Poilievre தலைமையிலான அரசாங்கம் அந் நபரை அகற்றும் என்று எதிர்க்கட்சி Conservatives வெள்ளிக்கிழமை சபதம் செய்தனர்.

Conservatives கட்சி அந்த நியமனத்தை ரத்து செய்யும் என்று கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான Melissa Lantsman ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இவர் பயங்கரவாதத்தை நியாயப்படுத்துதல் உட்பட இஸ்ரேல் எதிர்ப்பு அறிக்கைகளின் நீண்ட பதிவுகள் Dattani இடம் இருப்பதாகவும், பிரதம மந்திரி Justin Trudeau அவரை பதவி விலக்க வேண்டும் என்றும் Melissa கூறினார்.

கனேடிய யூத அமைப்புகளின் கவலைகளைத் தொடர்ந்து Dattani மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, நீதி அமைச்சர் Arif Virani சுயாதீன விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

Related posts

வியாழன் முதல் 4,100 Ontario convenience stores மது விற்பதற்கான உரிமம் பெற்றுள்ளன

admin

Bank of Canada பணவீக்கத்தை 2% ஆக வைத்திருப்பதற்காக, அரை சதவீத புள்ளி விகிதக் குறைப்பை வழங்குகிறது

admin

கனேடியப் பெண் ஒருவர் ஆழ்கடலில் புகைப்படம் எடுத்து “உலக சாதனை” படைத்துள்ளார்.

Editor