கனடா செய்திகள்

மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற Joe Biden இன் அறிவிப்புக்கு Justin Trudeau பதிலளித்துள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி Joe Biden மறுதேர்தலுக்கான தனது முயற்சியை கைவிட்டார் என ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த செய்திக்கு பிரதம மந்திரி Justin Trudeau பதிலளித்துள்ளார். எனக்கு ஜனாதிபதி Biden இனைப் பல ஆண்டுகளாகத் தெரியும். அவர் ஒரு சிறந்த மனிதர், அவர் செய்யும் அனைத்தும் அவரது தேசத்தின் மீதான அன்பினால் வழிநடத்தப்படுகின்றன என Trudeau தனது X பதிவில் எழுதியிருந்தார்..

ஞாயிறு பிற்பகல் Biden தனது X கணக்கில் பதிவேற்றிய கடிதத்தில், 2024 இல் அமெரிக்காவில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்றும், உங்கள் தலைவராக இருப்பது எனது வாழ்வின் மிகப்பெரிய கவுரவமாகும். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கமாக இருந்தாலும், நான் பதவியில் இருந்து விலகி நிற்பது எனது கட்சிக்கும் நாட்டிற்கும் நல்லது என்று நான் நம்புகிறேன். எனது எஞ்சிய காலப்பகுதியில் ஜனாதிபதியாக எனது கடமைகளை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

Barrhaven நகரில் 6 இலங்கையர்களை கொலை செய்த சந்தேக நபர் இன்று Ottawa நீதி மன்றில் முன்னிலை;

Editor

தலிபான்களின் பிடியிலிருந்து விடுபட்ட கனேடிய ஆயுதப்படை வீரர்

canadanews

June 24 அன்று Toronto-St. Paul’s இடைத்தேர்தலுக்கு அழைப்பு

admin