2023 இல் கனடாவில் ஏற்ப்பட்ட காட்டுத்தீயால் ஏற்பட்ட கிரக வெப்பமயமாதல் உமிழ்வுகள் முந்தைய ஆண்டை விட நாட்டின் fossil fuel emissions இனை நான்கு மடங்காக உயர்த்தியுள்ளது என சமீபத்திய NASA ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் கனடாவில் 2023 மே முதல் செப்டம்பர் வரை ஏற்பட்ட காட்டுத்தீயை விட சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா மட்டுமே ஆண்டுக்கு அதிக கார்பனை வெளியிடுகின்றன என்று கூறுகின்றது.
அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகள் காடுகளின் கார்பனை உறிஞ்சும் திறனைக் கடுமையாகக் குறைக்கலாம் என்று California இல் உள்ள நாசாவின் Jet Propulsion ஆய்வகத்தின் carbon cycle விஞ்ஞானி Byrne கவலை தெரிவித்தார்.
கடுமையான வெப்பம் மற்றும் வறண்ட நிலைகள் கனடாவின் நான்கு சதவீத வனப்பகுதியில் எரியும் காட்டுத் தீயை இயக்க உதவியது மற்றும் 232,000 மக்களை வெளியேற்ற வழிவகுத்தது என்று ஆய்வு கூறுகிறது. காலநிலை மாதிரிகள், அந்த நிலைமைகள் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சாதாரணமாகி, தீ செயல்பாடு அதிகரிக்க வழிவகுக்கும் என்று கணிக்கின்றன.கனடாவின் காடுகள் நீண்ட காலமாக அவை வெளியிடுவதை விட அதிக கார்பனை உறிஞ்சி வருகின்றன, மேலும் உலகெங்கிலும் உள்ள காடுகள் மனிதனால் ஏற்படும் உமிழ்வுகளில் 25 சதவீதத்தை உறிஞ்சும் என்று கருதப்படுகிறது. இருப்பினும் அதிகரித்து வரும் காட்டுத்தீ கனேடிய காடுகளின் கார்பனை உறுஞ்சும் திறனைக் குறைக்கும் என்று ஆய்வு கூறுகின்றது.