Air Canada இல் உள்ள விமானிகள், விமான நிறுவனத்துடனான தற்காலிக உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். 67 சதவீதம் விமானிகள் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக Air Line Pilots Association வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் தோராயமாக 5,400 விமானிகளுக்கு நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 42 சதவீத ஊதிய உயர்வை வழங்குகிறது.
இந்த ஒப்பந்தம் கடந்த இரண்டு தசாப்தங்களாக Air Canada விமானிகள் இழந்ததை மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் உருவாக்குவதற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது என்று Charlene Hudy வியாழக்கிழமை அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
ஒரு வருடத்திற்கும் மேலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எட்டப்பட்ட இவ் தற்காலிக ஒப்பந்தமானது 670 விமானங்கள் ரத்து மற்றும் தினசரி 110,000 பயணிகளிற்கு இடையூறுகளை விளைவிக்கும் வேலைநிறுத்தத்தைத் தடுத்துள்ளது.
தகுதிவாய்ந்த விமானிகளில் 99 சதவீதம் பேர் ஒப்புதல் வாக்கெடுப்பில் வாக்களித்ததாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் செப்டம்பர் 2023 முதல் நடைமுறைக்கு வருவதுடன், செப்டம்பர் 29, 2027 அன்று காலாவதியாகிறது.