கனடா செய்திகள்

பதிலடிகளை விடுத்து ஈரானின் தாக்குதல்களை முறியடிப்பதில் வெற்றி பெறவேண்டும் – Joly

இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது முக்கியம் எனவே, இந்த வார இறுதியில் முறியடிக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் மீது குண்டுகளை வீசாமல் Middle East இல் அதிகரித்து வரும் மோதல்களைத் தணிக்க உதவுமாறு இஸ்ரேலை வலியுறுத்துவதாக திங்களன்று வெளியுறவு அமைச்சர் Mélanie Joly பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

இஸ்ரேலைத் தாக்குவதற்கு Hezbollah மற்றும் Hamas போன்ற குழுக்களுக்கு Tehran அதிகாரம் அளிப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி, இஸ்ரேலும் ஈரானும் பல ஆண்டுகளாக பினாமி போரில் ஈடுபட்டுள்ளன. இதனையடுத்து சனிக்கிழமையன்று ஈரான் இஸ்ரேல் மீதான முதல் இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது.

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது ஏப்ரல் 1ம் திகதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் தான் காரணம் என்று பரவலாக நம்பப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியான drones, cruise ஏவுகணைகள் மற்றும் ballistic ஏவுகணைகள் மூலம் ஈரான் பதிலடி கொடுத்தது. அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேல் மற்றும் ஜோர்டனால் இடைமறிக்கப்பட்டன.

Related posts

2032 இல் NATO இன் பாதுகாப்பு வரவு செலவுத் திட்ட இலக்கை அடைவதை கனடா நோக்கமாகக் கொண்டுள்ளது – Trudeau

admin

Hydro வெடிப்பினால் இரண்டு தொழிலாளர்கள் படுகாயம்: நூற்றுக்கு மேற்ப்பட்டடோர் மின் தடையால் அவதி

admin

பணவீக்கம் காரணமாக BoC இந்த வாரம் அதிகப்படியான விகிதக் குறைப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Canadatamilnews