கனடா செய்திகள்

Liberal கட்சி தலைமை பதவிக்கு Mélanie Joly போட்டியிடபோவதில்லை

Liberal கட்சி தலைமைக்கு போட்டியிடுவதிலிருந்து Foreign Affairs Minister Mélanie Joly விலகுகின்றார். பிரதம மந்திரி பதவியை விட தனது தற்போதைய பணிக்கு முன்னுரிமை அளிக்கும் இரண்டாவது அமைச்சரவை மந்திரி என்ற பெருமையைப் பெறுகிறார்.

Liberal கட்சியை அதன் முதல் பெண் தலைவராக வழிநடத்த தான் தயாராக இருந்தாலும், கனடா-அமெரிக்க உறவுகளுக்கு முக்கியமான இந் நேரத்தில் தனது அமைச்சரவை பதவியை ராஜினாமா செய்ய விரும்பவில்லை என்று Joly கூறினார்.

நிதியமைச்சர் Dominic LeBlanc தலைமைத்துவத்திற்கு போட்டியிடுவதற்கான முயற்சியை நிராகரித்துள்ளார். இது Liberal எம்.பி.க்கள் மற்றும் Judy Sgro உட்பட அவர் வலுவான வேட்பாளராக போட்டிக்கு பங்களிப்பார் என்று நம்பும் மற்றவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

former finance minister, Chrystia Freeland மற்றும் former B.C. premier Christy Clark ஆகியோர் போட்டியிடுவார்களா என்பது குறித்து பல மாதங்களாக எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது. அதே சமயம் Karina Gould, François-Philippe Champagne, Jonathan Wilkinson, Anita Anand மற்றும் Steven MacKinnon ஆகியோரும் தங்கள் முடிவை எடுக்க வேண்டும். இதுவரை Ontario Liberal MP Chandra Arya மற்றும் former Montreal MP Frank Baylis ஆகிய இருவர் மட்டுமே போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த இரு வேட்பாளர்கள் ஆவர்.

Related posts

மலிவு விலையில் வீடுகள் இல்லாமையினால் Ontarioவின் நிதியுதவியை நிறுத்தி வைப்பதாக மத்திய வங்கிகள் அச்சுறுத்தல்

admin

நிரந்தர வதிவிடத்திற்கான பாதையை வழங்கும் இரண்டு முக்கிய மூலங்களை Quebec முடக்குகிறது

admin

கனமழையால் GTA முழுவதும் ஏற்ப்பட்ட பாரிய வெள்ளம்

admin