திங்கட்கிழமை முதல் கடிதமொன்றை அஞ்சல் செய்வதற்கான செலவு 25% அதிகரிக்கவுள்ளது. கனேடியர்களுக்கு கடித அஞ்சல் சேவையை வழங்குவதற்கான வளர்ந்து வரும் செலவினங்களைத் தொடர முத்திரையின் விலையில் ஏறக்குறைய 25% உயர்வு அவசியம் என்று crown corporation கூறுகிறது.
சிறு booklet, coil அல்லது pane இற்கான முத்திரை விலைகள் 25 சென்ட்கள் அதிகரித்து $1.24 ஆகவும், தனிப்பட்ட முத்திரைகள் $1.15ல் இருந்து $1.44 ஆகவும் உயரும். இது குடும்பச் செலவுகளை $2.26 ஆகவும், சிறு வணிகச் செலவுகளை ஆண்டுதோறும் $42.17 ஆகவும் அதிகரிக்கும். மேலும் இப் புதிய விகிதங்கள் 2025 ஆம் ஆண்டில் Canada Post இற்கு சுமார் $80 மில்லியன் கூடுதல் வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு தசாப்தங்களில் கடித அஞ்சல் அளவுகள் 2006 இல் 5.5 பில்லியன் இலிருந்து 2023 இல் 2.2 பில்லியன் கடிதங்களாக 60% குறைந்துள்ளதாக Canada Post தரவுகள் குறிப்பிடுகின்றன.