Ontario மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் February 27 ஆந் திகதி நடத்துவதாக Ontario மாகாண முதல்வர் Doug Ford அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இம்முறை நான்கு தமிழர்கள் குறித்த மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
Ontario மாகாணத்தில் கன்சர்வேட்டிவ் கட்சிசார்பாக இம்முறை மூன்று தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் Markham-Thornhill தொகுதியில் லோகன் கணபதி போட்டியிடவுள்ளதாக November 28, 2024 இல் கட்சியினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
கன்சர்வேட்டிவ் கட்சிசார்பில் Scarborough-Rouge Park தொகுதியில் போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளரான விஜய் தணிகாசலம் December 11, 2024 கட்சியினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தார் இவர்கள் இருவரும் 2018 ஆம் ஆண்டு முதல் மாகாணசபை உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து புதிய ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தட்ஷா நவநீதன் Scarborough வடக்குத் தொகுதியில் போட்டியிடுகின்றார். இவர் 2023 ஆம் ஆண்டு Scarborough-Guildwood தொகுதியில் நடைபெற்ற Ontario மாகாணசபை இடைத்தேர்தலில் NDP சார்பில் போட்டியிட்டவராவார்.
இத்தேர்தலில் நான்காவது தமிழ் வேட்பாளராக களமிறங்கும் Jude Aloysius கன்சர்வேட்டிவ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி
Scarborough-Guildwood தொகுதியில் போட்டியிடுகிறார்.
எனவே, மேற்குறிப்பிட்டபடி இம்முறை Ontario மாகாணசபைத் தேர்தலில் Ontario PC சார்பில் மூன்று தமிழ் வேட்பாளர்களும் NDP கட்சி சார்பில் ஒருவருமாக நான்கு தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.