மந்தகதியில் உள்ள கனடாவின் சனத்தொகை வளர்ச்சி வேகம் காரணமாக ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி மக்கள் தொகை 41,528,680 ஆக அதிகரித்துள்ளதாக கனடா புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் பின்னர் சனத்தொகை வளர்ச்சி வேகம் தொடர்ந்து மெதுவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆண்டின் October 01 உடன் ஒப்பிடும்போது மொத்த மக்கள் தொகை 63,382 அதிகரித்து, காலாண்டு வளர்ச்சி விகிதம் 0.2 சதவீதமாக உள்ளது.
2020 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் தொற்றுநோய் தொடர்பான எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த மிகவும் மெதுவான வளர்ச்சி விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் 2021 ஆம் ஆண்டு தொடக்கம் கனடாவில் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இந்த சனத்தொகை வீழ்ச்சியில் தாக்கம் செலுத்தியுள்ளது. அதன்படி 2024 இல் கனேடிய மக்கள் தொகை 744,324 பேர் அல்லது 1.8 சதவீதம் அதிகரித்துள்ளது.