Israel-Hamas போரின் போது மனிதாபிமான முயற்சிகளை ஆவணப்படுத்தும் கனேடிய-பாலஸ்தீனியர் ஒருவரை ஆதரிக்கும் குழுவின் உறுப்பினர் ஒருவர், Gazaவிற்கு சென்ற நிலையில் அங்கிருந்து தொடர்பை இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக தெற்கு Gaza பகுதியில் உள்ள Nasser மருத்துவமனையில் இருந்து கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் தொடர்புகொண்ட போது, அருகில் உள்ள Rafah சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், Rafah செல்லும் வழியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் செவ்வாய்கிழமை அழைத்துச் செல்லப்பட்டதாக மூன்று நேரில் பார்த்த சாட்சிகள் கூறியதாக soomer தெரிவித்தார்.
அத்துடன் காசாவில் காணாமல் போன கனேடியர் ஒருவரைப் பற்றி அறிந்திருப்பதாகவும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, அவர்களது குடும்பத்தினருடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகவும் Global Affairs Canada கூறுகிறது.