கனடா செய்திகள்

Ontariaவில் இன்றிலிருந்து அமுலுக்கு வரும் ஒற்றைக்கட்டண திட்டம்.

இன்று முதல் Ontario பொதுப்போக்குவத்துச் சேவையில் ஒற்றைக்கட்டண திட்டம் அமுலுக்கு வருகின்றது.

இன்று தொடக்கம் Toronto பொதுப்போக்குவரத்துச் சேவை மற்றும் Toronto பெரும்பாகத்திலுள்ள GO போக்குவரத்துச் சேவை உட்பட இத்திட்டத்தில் பங்குபற்றும் அனைத்து சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டும் கட்டணம் செலுத்தினால் போதுமானதாகும்.

இது தொடர்பில் Ontariaவின் முதல்வர் அவர்கள் Ontario அரசானது, அனைத்து போக்குவரத்துப் பயணிகளுக்கும் அவர்களின் சொந்தப் பணத்தை சேமித்து மீண்டும் அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கும் என கூறுகின்றார்.

மேலும், ஒற்றைக்கட்டணத் திட்டத்தின் மூலம் சராசரியாக ஆண்டிற்கு 1600 டொலர்களை ஒருவர் சேமிக்க முடிவதோடு, பயணச் சீட்டின் விலை காரணமாக மக்கள் இனி தமது வாழ்க்கையின் பெரும் தருணங்களையோ வேலை வாய்புகளையோ இழக்க நேரிடாது என போக்குவரத்து இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

Ontario அரசின் முழுமையான நிதியுதவியில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த ‘ஒற்றைக்கட்டண’ முறை ஆண்டொன்றுக்கு போக்குவரத்துத்துறையில் எட்டு மில்லியன் புதிய பயணங்களுக்கு வழிவகுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் ஒற்றைக்கட்டணத் திட்டத்தின் மூலம், ‘கோ’ (GO) போக்குவரத்துச் சேவை உட்பட Barrie TransitBrampton TransitBurlington TransitBradford West Gwillimbury TransitDurham Region TransitGrand River TransitGuelph TransitHamilton Street RailwayMilton TransitMiWayOakville TransitTTCYork Region Transit ஆகிய அனைத்து போக்குவரத்துச் சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டுமே கட்டணம் செலுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கனடாவில் உள்ள சீக்கிய ஆர்வலர்களை மீது தாக்குதல் நடத்த உள்துறை அமைச்சர் உத்தரவிட்டதாக Ottawa இன் குற்றச்சாட்டுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது

admin

கனேடிய பொருளாதார வல்லுனர்களால் அதிக வட்டி விகிதக் குறைப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன

admin

பிளாஸ்ரிக் பயன்பாடு தொடர்பாக மத்திய அரசாங்கத்தின் கண்காணிப்பு அறிக்கை

Canadatamilnews