கனடா செய்திகள்

Bank of canada வின் வட்டி வீதம் தொடர்ந்தும் 5 வீதத்தில்;

Bank of canada தற்போது அதன் முக்கிய வட்டி விகிதத்தை ஐந்து சதவீதத்தில் மாறாது பேணுகிறது. இதே நேரம் மிக விரைவில் வட்டி விகிதங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும்
குறிப்பிட்டுள்ளது.

கொள்கை விகிதத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்த நிலையிலேயே மத்திய வங்கி கடந்த புதன்கிழமை அதன் வட்டி விகிதம் மாறாது என அறிவித்துள்ளது.

பணவீக்கம் தொடர்ந்து குறைந்துள்ளதாலும் பொருளாதாரம் பலவீனமடைந்து வருவதனாலுமே அடிப்படை விலை அழுத்தங்கள் அதிகமாக உள்ளதாக Bank of canada குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கனடாவின் பணவீக்க விகிதம் கடந்த ஜனவரியில் 2.9 சதவீதமாகக் குறைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மத்திய வங்கி 3.5 வீதத்தில் அதன் வட்டி வீதத்தை பேணி வருகின்ற நிலையில் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் அதன் வட்டி விகிதங்களை குறைக்க தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

2032 இல் NATO இன் பாதுகாப்பு வரவு செலவுத் திட்ட இலக்கை அடைவதை கனடா நோக்கமாகக் கொண்டுள்ளது – Trudeau

admin

இன்று சில கனேடிய குடும்பங்கள் ஒரு குழந்தைக்கு $620 வரை பெற்றுக்கொள்வார்கள்

admin

தொழிலாளர் பற்றாக்குறையை அணுகுவதற்கு Liberal immigration pivot ஆனது கனடாவை கட்டாயப்படுத்துகிறது

admin