கனடா செய்திகள்

இஸ்ரேலும் கமாசும் நிலையான போர் நிறுத்தத்தை நோக்கி செயல்பட வேண்டும் என கனடிய பிரதமர் “Justin Trudeau” வலியுறுத்தினார்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், அமைதியான நாடுகளில் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதை உறுதிசெய்ய கனடா உறுதிபூண்டுள்ளது என Justin Trudeau தெரிவித்தார்.

கனடிய பிரதமர்; ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பிரதமர்களுடன் இணைந்து இந்த விடயத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் கமாஸ் பணயக் கைதிகளை விடுவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கமாஸ் குழு பாலியல் வன்முறைக்கு பொறுப்பானது என குறிப்பிட்டுள்ளதுடன்,
பலஸ்தீனிய குடிமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

Ontario முழுவதிலும் உள்ள LCBO கடைகள் இன்று மீண்டும் திறக்கப்படும்

admin

Trudeau பொதுச் சபையில் கலந்து கொள்கிறார்- அங்கு Biden இறுதி ஐ.நா உரையை ஆற்றுகிறார்

admin

வெளிநாட்டு தலையீடானது பெரிய சவாலாக உள்ளது – பிரான்ஸ் பிரதமர் அறிக்கை

admin