கனடா செய்திகள்

அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ​​Ontarioவின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாக நிதி அமைச்சர் உறுதி;

அடுத்த Ontario வரவு செலவுத் திட்டத்தை வழங்கும்போது, ​​வரிகள் மற்றும் கட்டணங்களை உயர்த்தாமல் Ontarioவின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாக Finance Minister Peter Bethlenfalvy, உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் கடந்த மாதம் நிதி பற்றிய ஒரு புது தகவலை வழங்கியபோது, Ontario ​​வில் $4.5 பில்லியன் நிதி பற்றாக்குறையுடன் இந்த ஆண்டு முடிவடையும் என அவர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அவர் எதிர்பார்த்திருந்த $1.3 பில்லியன் பற்றாக்குறையை விட இது கணிசமாக அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் Ontarioவின் நிதிப் பொறுப்புக்கூறல் அலுவலகம் (FAO) இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் $2.3 பில்லியனுக்கும் அதிகமாக செலவழித்துள்ளதாகத் தெரிவித்தது. அத்துடன்,
FAO குறிப்பிட்டது போல், மாகாணத்தின் தற்செயல் நிதி $4 பில்லியனாக இருந்ததுடன் நிதியாண்டைத் தொடங்கிய பிறகு $5.1 பில்லியனாக அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவில் Flu தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை.

admin

CSIS இயக்குனரான David Vigneault 7 வருடங்களிற்கு பின் பணியில் இருந்து விலகுகின்றார்

admin

Toronto Pearson விமான நிலையத்தில் விமான சேவை வழங்குநர்கள் வேலைநிறுத்தம்

admin