வரவிருக்கும் federal budget இல் நடுத்தர வர்க்கத்தின் மீதான வரிகளை உயர்த்துவதை நிராகரித்துள்ளதாக Ottawa வின் நிதியமைச்சர் Chrystia Freeland செவ்வாயன்று நடைபெற்ற செய்தி மாநாட்டின் போது தெரிவித்தார்.
பெருநிறுவனங்களிற்கோ அல்லது நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியல்லாத பிறர் மீது புதிய வரிகள் விதிக்கப்படுவது பற்றிய தகவல் எதையும் அவர் குறிப்பிடவில்லை. மாறாக, கனேடியர்களுக்கு வீடு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற விடயங்களில் முதலீடு செய்ய வேண்டிய அவசர தேவையை வலியுறுத்தினார்.
April 16 ஆம் திகதி federal budget வழங்கப்படவுள்ள நிலையில், தேசிய பள்ளிகளிற்கான உணவுத் திட்டம் உட்பட சமீபத்திய கொள்கை முன்மொழிவுகளுக்கு தாராளவாதிகள் எவ்வாறு பணம் செலுத்த போகிறார்கள் போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.