கனடா செய்திகள்

Toronto Pearson விமான நிலையத்தில் விமான சேவை வழங்குநர்கள் வேலைநிறுத்தம்

Gate Gourmet வழங்கிய இறுதிச் சலுகையை நிராகரித்ததை அடுத்து, உத்தியோகபூர்வமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக விமானச் சேவை ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக Toronto Pearson விமான நிலையத்தில் சில பயணத் தாமதங்கள் ஏற்பட்டன.

Toronto Pearson விமான நிலையத்தின் 800 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 99 சதவீதம் பேர் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்ததாக Teamsters Local Union 647 அறிவித்துள்ளது. இவ் வேலைநிறுத்தமானது அதிகாரப்பூர்வமாக 12:01 a.m மணிக்கு தொடங்கியதுடன், காலை 6 மணி வரை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள Mississauga இல் மறியல் செய்பவர்களைக் காண முடிந்தது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சமைத்தல் , உணவு மற்றும் பிற பொருட்களை பொதி செய்தல், விநியோகித்தல் போன்ற விமானங்களிற்கான சேவைகளை மேற்கொள்பவராவர். இவ் வேலைநிறுத்ததினால் Air Canada, WestJet, United Airlines, Delta Airlines, TAP Air Portugal, Air India, Aero Mexico, SAS Scandinavian Airlines, மற்றும் Jetlines போன்ற விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Related posts

Trump இன் இணைப்பு சம்பந்தமான அச்சுறுத்தல்களிற்கு அதிகம் எதிர்வினையாற்றக்கூடாது என்று அமைச்சரவை அமைச்சர்கள் தெரிவிப்பு

admin

leadership race இனைத் தொடர்ந்து Liberal கட்சித் தலைவர் பதவியிலிருந்து Trudeau ராஜினாமா செய்யவுள்ளார்

admin

Ontariaவில் இன்றிலிருந்து அமுலுக்கு வரும் ஒற்றைக்கட்டண திட்டம்.

Editor