Trudeau அரசாங்கம் வெளிநாட்டு தலையீட்டை எதிர்கொள்வதற்கு அடுத்த வார தொடக்கத்தில் சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் வெளிநாட்டு முகவர் பதிவேடு மற்றும் கனடாவின் உளவு நிறுவனத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம்.
2021ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்குமாறு புலம்பெயர் சமூகங்களுடன் இணைந்து பதிவேடு கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நட்பு நாடுகள் ஏற்கனவே வெளிநாட்டு முகவர் பதிவுகளை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த இரண்டு பிரச்சாரங்களின் போது வெளிநாட்டு தலையீடுகள் நடந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளையும் பாதிக்கவில்லை. இருப்பினும் வெளிநாட்டு தலையீடு ஒரு riding இனை பாதித்திருக்கலாம் என commissioner Marie-Josee Hogue தெரிவித்துள்ளார்.