கனடா செய்திகள்

York பிராந்தியத்திலுள்ள நபரொருவர் இரண்டு teenage சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்

York பிராந்திய Bradford West Gwillimbury இனைச் சேர்ந்த இருபது வயதான ஜனார்த்தன் சிவரஞ்சன் இரண்டு teenage சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சந்தேக நபர் Newmarket நகரிலுள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களை அணுகுவது தெரிய வந்துள்ளது.

June 2023 இல் சந்தேக நபர் 16 வயது பெண் ஒருவரைச் சந்தித்ததாகவும் அவர் பல வாரங்களாக 17 வயது சிறுவனாகக் காட்டிக் கொண்டு சமூக ஊடகங்களில் தொடர்பு கொண்டதாகக் காவல்துறை கூறுகிறது. சந்திப்பின் போது ​​19 வயதான சந்தேக நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மேலதிக விசாரணையின் பின்னர், சந்தேகநபர் 2023 ஆம் ஆண்டு October மாதம் விருந்தொன்றில் 13 வயது சிறுமியை சந்தித்ததாகவும், பிற்பகுதியில் சந்தேக நபர் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related posts

கனடாவில் உள்ள சீக்கிய ஆர்வலர்களை மீது தாக்குதல் நடத்த உள்துறை அமைச்சர் உத்தரவிட்டதாக Ottawa இன் குற்றச்சாட்டுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது

admin

கனேடிய நிறுவனங்களில் அதிக வெடிகுண்டு மிரட்டல்கள் – RCMP பதிலளிப்பு

admin

தெற்கு Ontario இன் Toronto பகுதியில் ஜூலையில் ஏற்ப்பட்ட திடீர் வெள்ளம் $940M காப்பீடு செய்யப்பட்ட சேதத்தை ஏற்படுத்தியுள்ளது

admin