கனடா செய்திகள்

Lebanon இல் வன்முறை அதிகரித்து வருவதால், கனேடியர்கள் விரைவில் வெளியேறுமாறு Ottawa அறிவுறுத்தல்

Hezbollah மற்றும் Israel இடையே நீடித்த மற்றும் அதிகரித்து வரும் வன்முறை காரணமாக எச்சரிக்கையின்றி பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றும், Lebanon இற்கு பயணிப்பதற்கான நேரம் இதுவல்ல என்றும், வன்முறை அதிகரித்து வரும் Lebanon இனை விட்டு இயன்றவரை விரைவில் வெளியேறுமாறு கனேடியர்களிற்கு வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly வலியுறுத்துகிறார்.

மேலும் இவர் Lebanon இல் உள்ள ஆயுத மோதல்கள் கனேடியர்களின் நாட்டை விட்டு வெளியேறும் திறனையும், தூதரக சேவைகளை வழங்கும் கனடாவின் திறனையும் பாதிக்கலாம், ஏனெனில் கனடா தற்போது கனேடியர்களுக்கு உதவி புறப்பாடு அல்லது வெளியேற்றங்களை வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

அவசர தூதரக உதவி தேவைப்படும் கனேடியர்கள் Lebanon இற்கான கனடா தூதரகத்தை 961 4 726 700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது Ottawa இல் உள்ள Global Affairs Canada’s Emergency Watch and Response Centre ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது.

Related posts

Project Odyssey இன் ஒரு பகுதியாக Peel பொலீசாரால் $33M மதிப்புள்ள திருட்டு வாகனங்கள் மீட்பு

admin

பிராந்திய விரிவாக்கத்தைத் தூண்டும் நோக்கிலான ஈரானின் தாக்குதல் – G7 நாடுகள் எச்சரிக்கை

admin

கனடாவில் அடுத்த வாரம் முதல் Ozempic இன் எடை குறைப்பு மருந்துதான Wegovy கிடைக்கும்

admin