கனடா செய்திகள்

இந்த வாரத்திற்கான மதுபானங்கள் Ontario இன் உரிமம் பெற்ற மளிகைக் கடைகளுக்கு வழங்க தயாராகின்றன

Ontario இன் உரிமம் பெற்ற மளிகைக் கடைகளுக்கு இந்த வாரம் தொடக்கம் ready-to-drink (RTD)மதுபானங்களையும், பெரிய beer pack sizes இனையும் வாங்கி விற்க அனுமதிக்கப்படும். August 1 க்குப் பதிலாக July 18 அன்று உரிமம் பெற்ற 450 மளிகைக் கடைகளில் beer, cider, அல்லது wine விற்க அனுமதிப்பதன் மூலம் Ford அரசாங்கம் அதன் மது விற்பனை விரிவாக்கத் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தை விரைவுபடுத்துகிறது.

மேலும் Ontario இன் மதுபானக் கட்டுப்பாட்டு வாரியம் (LCBO) ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு மத்தியில் சில கடைகளில் உள்ள இடங்களைத் திறக்கும் திட்டத்தை கைவிட்டுள்ளது. OPSEU உறுப்பினர்களின் வேலைநிறுத்தம் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால், வாரத்தில் மூன்று நாட்களிற்கு 32 கடைகளை வரையறுக்கப்பட்ட மணிநேரத்துடன் திறக்க திட்டமிட்டிருந்தது. அத்தோடு வேலைநிறுத்தம் தொடங்கியதிலிருந்து online shopping மூலம் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடிந்ததாக LCBO கூறுகிறது.

Related posts

Toronto இலிருந்து Mumbai க்கு இடைநில்லா விமானங்களை வழங்குவதற்கான சேவையை Air Canada விரிவுபடுத்துகின்றது

admin

வெளிநாட்டு தலையீடானது பெரிய சவாலாக உள்ளது – பிரான்ஸ் பிரதமர் அறிக்கை

admin

கனடாவின் பெரும்பான்மையான குடியிருப்பாளர்கள் வரையறைகளிற்கு உட்பட்டு புலம்பெயர்ந்தோரை அனுமதிக்கின்றனர் – CityNews poll

admin