கனடா செய்திகள்

சர்வதேச மாணவர்கள் கனடா வழியாக அமெரிக்காவிற்கு கடத்தப்படுவதாக இந்தியா தெரிவிப்பு

கனடா-அமெரிக்க எல்லையில் சட்டவிரோதமாக மாணவர்களை ஏற்றிச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட கனேடிய கல்லூரிகளுக்கும் மும்பை நிறுவனங்களுக்கும் இடையே கூறப்படும் தொடர்புகள் குறித்து Indian law enforcement agencies விசாரணை நடத்தி வருகிறது.

பணமோசடி மற்றும் அந்நியச் செலாவணி சட்டங்களை விசாரிக்கும் அமைப்பு ஒன்று மனித கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டான ஆதாரங்களைப் புகாரளித்துள்ளது. ஆனால் இக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சோதிக்கப்படவில்லை.

ஜனவரி 19, 2022 அன்று Manitoba இற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான எல்லை அருகே Jagdish Baldevbhai Patel (வயது 39), அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இறந்ததைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகள் இவ் விசாரணையைத் தொடங்கினர். Florida இனைச் சேர்ந்த Steve Shand மற்றும் Chicago இல் கைது செய்யப்பட்ட Harshkumar Patel ஆகியோர் அமெரிக்காவிற்கு அங்கீகரிக்கப்படாத நபர்களைக் கொண்டு வந்து, அவர்களை ஏற்றிச் சென்று லாபம் ஈட்டியதாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.

Harshkumar Patel மற்றும் Shand ஆகியோர் எல்லையின் Minnesota பகுதியில் 11 இந்திய புலம்பெயர்ந்தோரை அழைத்துச் செல்ல ஒரு அதிநவீன நடவடிக்கையை ஒருங்கிணைத்ததாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடக்கும்போது ஏழு பேர் மட்டுமே தப்பியதுடன், Patel குடும்பத்தினர் குளிரில் இறந்து கிடந்தனர். Patel மற்றும் Shand ஆகியோருக்கு இதுவரை தண்டனை விதிக்கப்படவில்லை.

கனடாவில் இருந்து குடும்பத்திற்கு பயணத்தை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் Bhavesh Ashokbhai Patel க்கு எதிரான புகாரை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு $93,000 முதல் $102,000 வரை கட்டணம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இச் சம்பவமானது இந்தியாவில் Dingucha வழக்கு என அழைக்கப்படுகிறது.

குஜராத்தில் 1,700 முகவர்கள் மற்றும் இந்தியா முழுவதும் 3,500 முகவர்கள் கொண்ட இவ் வலையமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25,000 மாணவர்களை ஒரு நிறுவனத்தால் பரிந்துரைப்பதுடன், 10,000 மாணவர்கள் மற்றொரு நிறுவனத்தால் இந்தியாவிற்கு வெளியே உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இதில் 112 கனேடிய கல்லூரிகள் ஒரு நிறுவனத்துடனும், 150 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றொரு நிறுவனத்துடனும் கூட்டு சேர்ந்துள்ளன. எந்தவொரு கல்லூரிக்கும் இரு நிறுவனங்களுடனும் தொடர்புகள் உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை.

Related posts

இறுக்கமான சந்தை நிலவரத்தினால் வீட்டு விற்பனை பெறுமதி உயர்வு

Editor

Toronto பொலிசாரால் தேடப்படுகின்ற முதல் 25 தப்பியோடியோரின் பட்டியல் வெளியீடு – $1M வெகுமதி வழங்கப்படும்

admin

கனடாவில் சராசரியாக கேட்கப்படும் வாடகை May மாதத்தில் $2,202 இனை எட்டியுள்ளது

admin