கனடா செய்திகள்

Trump இன் Florida விஜயம் குறித்த தகவலை LeBlanc மற்றும் Joly வழங்கினர்

Trump இன் சமூக ஊடகப் பதிவுகளை பிரதமர் Justin Trudeau விமர்சித்ததைத் தொடர்ந்து, கனடாவின் $1.3 பில்லியன் எல்லைத் திட்டத்தைப் பற்றி விவாதிக்க இரண்டு மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள் Florida இல் Trump இன் குழுவைச் சந்தித்தனர். மேலும் Finance Minister Dominic LeBlanc மற்றும் Foreign Affair Minister Melanie Joly ஆகியோர் Palm Beach சந்திப்பின் போதான விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

commerce secretary ஆக Lutnick, மற்றும் North Dakota இன் former governor ஆகவுள்ள Burgum உள்துறை செயலாளருக்காகவும் Trump இனால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் senator Lindsay Graham இனை Joly வெள்ளிக்கிழமை மாலை Florida இல் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வர்த்தக ஏற்றத்தாழ்வு, சட்டவிரோத மருந்துகள் மற்றும் எல்லைக் குடியேற்றப் பிரச்சனைகளுக்கு மத்தியில், கனடா மற்றும் மெக்சிகோ மீது 25% இறக்குமதி வரியை விதிக்கப்போவதாக Trump அச்சுறுத்தியதைத் தொடர்ந்து தொடர்ச்சியான எல்லைக் கண்காணிப்புக்கான புதிய aerial intelligence task force மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் போதைப்பொருள் கண்டறிதலுக்கான நாய் குழுக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய எல்லைத் திட்டத்தை டிசம்பர் 17 அன்று கனடா அறிவித்தது.

Trump சமூக ஊடகங்களில் Trudeau இனை மீண்டும் மீண்டும் கேலி செய்கிறார், குறிப்பாக Christmas தின செய்தியில் கனேடியர்கள் அமெரிக்கர்களாக மாறினால் குறைந்த வரி செலுத்துவார்கள் மற்றும் சிறந்த இராணுவ பாதுகாப்பைப் பெறுவார்கள் என்று பரிந்துரைத்ததுடன், Trudeau வை பிரதம மந்திரிக்கு பதிலாக “governor” என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வாரம் Chrystia Freeland நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து Trudeau இன் தலைமை ஏற்கனவே இருந்ததை விட மேலும் கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளது. அத்தோடு இருபதுக்கும் மேற்பட்ட Liberal எம்.பி.க்கள் Trudeau இனைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளனர்.

Related posts

செப்டம்பர் 1 முதல் Ontario பாடசாலைகளில் phones மற்றும் vaping தொடர்பான புதிய விதிகள் அமுலுக்கு வருகின்றன

admin

பணவீக்கம் காரணமாக BoC இந்த வாரம் அதிகப்படியான விகிதக் குறைப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Canadatamilnews

கடுமையான பனிப்பொழிவால் Nova Scotia வில் தொடரும் இடையூறுகள் !

Editor