Ontario இன் பெரும்பகுதி நீடித்த கடுமையான குளிர் எச்சரிக்கைக்குள்ளாகி உள்ளதாகவும், பல பகுதிகளில் காற்றின் குளிர் -40 ஆக இருப்பதாகவும் Environment Canada தெரிவித்துள்ளது.
Huron ஏரி மற்றும் Georgian விரிகுடாவை அண்டிய பகுதிகளுக்கு வானிலை நிறுவனம் கடுமையான குளிர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வடக்கு Huron மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வானிலை நிறுவனம் பனிப்புயல் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது, அத்துடன் புதன்கிழமை வரை 30 முதல் 60 சென்டிமீட்டர் வரையான பனிப்பொழிவும் எதிர்பார்க்கப்படுகிறது.