Washington இல் Donald Trump பதவியேற்ற பின்னர், பிரதமர் Justin Trudeau இன்று முதன் முறையாக ஊடகங்களுடன் பேச உள்ளதுடன் கேள்விகளுக்கும் பதிலளிக்க உள்ளார்.
மார்ச் மாதத்தில் அவர் பதவி விலகுவதற்கு முன், அரசாங்கத்தின் வருடாந்த குளிர்கால அமைச்சரவை ஒன்றுகூடலுக்காக Trudeau தனது குழுவினருடன் Quebec இன் Montebello இல் கூடுகிறார்.
வழக்கமாக விடுமுறைக்குப் பின்னர் பாராளுமன்றம் திரும்புவதற்கு முன்னதாக ஒன்றுகூடும் இந்த அமர்வு இந்த ஆண்டு Canada – U.S வர்த்தக உத்தியில் கவனம் செலுத்துகிறது.
ஜனாதிபதி போட்டியில் வெற்றி பெற்ற சிறிது நேரத்திலேயே, Trump தான் பதவியேற்ற முதல் நாளிலேயே Canada இற்கு எதிராக வரிகளை விதிக்கப்போவதாக அச்சுறுத்தினார். அது நடக்கவில்லை, எனினும் Fed.01, Canada மற்றும் Mexico நாடுகளை வரிகளால் தாக்குவது குறித்து யோசிப்பதாக Trump திங்கள்கிழமை மாலை கூறினார்.