கனடா செய்திகள்

அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு Ottawa வேகமாக செயற்பட வேண்டும்: Ford

Ontario கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் Doug Ford கனடா-அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு தொடர்பில் தொடர்சியாக மத்திய அரசை விமர்சித்து வரும் நிலையில் Trump நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கமைவாக எல்லைப்பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு விரைந்து செயற்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

எல்லைப் பேரரசர் ஒருவரை நியமிக்கப்போவதாக மத்திய அரசு கூறுகிறது. Trump நிர்வாகமும் அதைத்தான் விரும்புகிறது என்று Ford கூறினார். இதனை அறிந்து கொள்வதற்கு இன்னும் நான்கு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றார்.

இந்த வார தொடக்கத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படவும் கொடிய போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலை எதிர்ப்பதற்குமான முயற்சிகளை மேம்படுத்தவும் ஒரு “fentanyl czar” ஐ பெயரிடுவதாக அரசாங்கம் கூறியதன் பின்னணியிலேயே Ford தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் அமெரிக்க அதிபர் எல்லைதாண்டிய குடிப்பெயர்வுகள் மற்றும் fentanyl உள்ளிட்ட போதைப்பொருட்களின் தெற்கு நோக்கிய நகர்வுகளை காரணம் காட்டி கனடா மீது அதிக வரிகளை விதிக்கப்போவதாக அச்சுறுத்தியிருந்தார்.

பின்னர் கனடாவின் அண்மைய நடவடிக்கைகள் அவரது கோரிக்கைகளை பூர்த்திசெய்கிறதா என்பதை அமெரிக்கா மதிப்பிடும் வரை கட்டணங்களை ஒரு மாத காலத்திற்கு நிறுத்துவதற்கு Trump ஒப்புக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் கனடாவின் மக்கள் தொகை 430,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

Editor

Montreal துறைமுகத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட கார்கள் மீட்பு – GTA இலிருந்து திருடப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு

admin

Chrystia Freeland அடுத்த லிபரல் தலைவராக போட்டியிடுவார்.

canadanews