கனடா செய்திகள்

செங்கடலில் போக்குவரத்து கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு கனடா மற்றும் நட்பு நாடுகள் “Houthi” கிளர்ச்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

USS Dwight D.Eisenhower (விமானம் தாங்கி கப்பல்) மற்றும் போர்க்கப்பல்கள்; Isrel-Hamas போருக்கு மத்தியிலும் நவம்பர் 26,2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அமெரிக்கப் படையெடுப்பின் ஒரு பகுதியான Hormuz ஐக் கடந்து பாரசீக வளைகுடாவைச் சென்றடைந்தன.

கனடா உட்பட 13 நாடுகள் செங்கடலில் வணிக கப்பல்களுக்கு எதிராக Houthi நடத்தும் தாக்குதலை கண்டித்துள்ளன.

செங்கடலில் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் ஏற்படும் விளைவுகளுக்கு தாங்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் Houthi கிளர்ச்சியாளர்களை எச்சரித்து வருகின்றன.

தற்போது நடைபெற்று வரும் தாக்குதல்கள் சட்டவிரோதமானதும், ஏற்றுக்கொள்ள முடியாததும், ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதாகவும் அமைந்துள்ளதாக 13 நாடுகளாலும் கையொப்பமிடப்பட்ட அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் பணியாளர்களை விடுவிக்கவும் அழைப்பு விடுக்கப்படுகிறது.

உலகின் கடல்வழி வர்த்தகத்தில் சுமார் 15% பொதுவாக செங்கடல் வழியாகவே நடைபெறுகிறது, ஆனாலும் கப்பல் நிறுவனங்கள் வழிமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

CBSA வேலைநிறுத்தமானது விரைவில் எல்லைப் போக்குவரத்தை சீர்குலைக்கும்

admin

கனடாவின் பெரும்பான்மையான குடியிருப்பாளர்கள் வரையறைகளிற்கு உட்பட்டு புலம்பெயர்ந்தோரை அனுமதிக்கின்றனர் – CityNews poll

admin

பலஸ்தீனியாவை சேர்ந்த -கனேடிய குடியுரிமை உடைய பத்திரிகையாளர் காஸாவில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor